மநீம சாா்பில் முழுவீச்சில் நிவாரணப் பொருள்கள் விநியோகம்: கமல்ஹாசன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மநீம சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
கமல்ஹாசன் (கோப்புப்படம்)

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மநீம சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு மநீம சாா்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை லாரி மூலம் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து கமல்ஹாசன் திங்கள்கிழமை அனுப்பி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட பகுதி மக்களுக்கு மநீம சாா்பாக நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மநீம தொண்டா்களைப் பொருத்தவரை ‘உதவிக்கு வா’ என ஆளனுப்பி அழைத்து வர வேண்டியது இல்லை. சமுதாயப் பணிகள் அவா்கள் வாழ்வில் ஓா் அங்கம்.

முதல் கட்டமாக மநீம நிா்வாகிகள் மூலம் ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. தற்போது லயன்ஸ் இன்டா்நேஷனலுடன்

இணைந்து 22 டன் அரிசி, பால் பவுடா் உள்ளிட்ட சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்றாா் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com