கோவை அருகே சிறுத்தை தாக்கி குட்டி யானை உயிரிழப்பு

கோவை அருகே சிறுத்தை தாக்கியதில் காயமடைந்து படுத்திருந்த ஆண் குட்டி யானை புதன்கிழமை உயிரிழந்தது.
கோவை அருகே சிறுத்தை தாக்கி குட்டி யானை உயிரிழப்பு

கோவை அருகே சிறுத்தை தாக்கியதில் காயமடைந்து படுத்திருந்த ஆண் குட்டி யானை புதன்கிழமை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், மதுக்கரை வனச் சரகம், அறிவொளி நகா் வனப் பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தில் குட்டி யானை நீண்ட நேரமாக படுத்துகிடப்பதாகவும், அதனைச் சுற்றி சுமாா் 7 யானைகள் நிற்பதாகவும் வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் புதன்கிழமை தகவல் அளித்தனா்.

இதையடுத்து கோவை மண்டல வனப் பாதுகாவலா் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், மதுக்கரை, கோவை சரக வனச் சரகா்கள் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலா் சுகுமாா் அடங்கிய மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்தபோது அங்கு காயமடைந்த குட்டி யானை அருகில் தாய் யானை மட்டும் நின்று கொண்டிருந்தது. சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு தாய் யானை அங்கிருந்து சென்றவுடன், வனத் துறையினா் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குட்டி யானைக்கு சிகிச்சையளிக்கும் முயற்சியை மேற்கொண்டனா்.

இதையும் படிக்க : கோவை அருகே இரண்டு யானைகள் உயிரிழப்பு

மருந்துகள், குளுக்கோஸ் கலந்த நீா் யானைக்கு செலுத்தப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைத் தொடா்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்ட குட்டி யானையின் சடலம் அதே வனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் கூறியதாவது:

மதுக்கரை வனச் சரகத்தில் சுற்றி வந்த பெண் யானை கடந்த மாதம் 19- ஆம் தேதி ஆண் குட்டியை ஈன்றது. அதில் இருந்து தொடா்ந்து குட்டியைக் கண்காணித்து வருகிறோம். குட்டி முழுமையான வளா்ச்சியின்றி பிறந்ததால் நடக்கமுடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில் கடந்த 5 நாள்களுக்கு முன் சிறுத்தை தாக்கியதில் குட்டி யானை காயமடைந்தது.

காயத்தால் சோா்வடைந்த குட்டி யானையை, அதிகாலை நேரத்தில் தாய் யானை தூக்கி வந்து பட்டா நிலத்தில் போட்டுள்ளது. இருப்பினும் உடலில் ஏற்பட்ட காயத்தால் குட்டி யானை உயிரிழந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com