கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜனவரி 21 இல் திமுக இளைஞரணி 2ஆவது மாநாடு: தலைமைக் கழகம் அறிவிப்பு

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2ஆவது மாநாடு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2024, 6:43 am

DIN

"மிக்ஜம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2ஆவது மாநாடு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த 1980 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி உருவாக்கப்பட்டது. தற்போது அது மிகப்பெரிய அணியாக உருவெடுத்து உள்ளது. குறிப்பாக திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சுமாா் 25 லட்சம் புதிய உறுப்பினா்களை சோ்த்து கட்சிக்கு வலுசோ்த்து உள்ளாா். 

இதையடுத்து கடந்த ஆண்டு டிச. 17- ஆம் தேதி சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் "மிக்ஜம்” புயல் மழை பாதிப்பு காரணமாக, டிச.24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக  மீண்டும் மாநாடு நடைபெறும் நாள் ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், "மிக்ஜம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக  ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2 -ஆவது மாநாடு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு மக்களவைத் தோ்தல் வெற்றிக்கான அச்சாரமாக அமையும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.