கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் நாளை (ஜன. 8) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
Published on

சென்னையில் நாளை (ஜன. 8) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், சென்னைக்கு ஏற்கெனவே ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை சென்னையில் மிக கனமழை பெய்யவுள்ளது. 

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் நாளை (ஜன. 8) இரவு 8 மணி வரை அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். 

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை குறுகிய காலத்தில் அதிக மழை (2-3 மணி நேரங்களில் 25 செ.மீ மேல்) பெய்யவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். 

வடகோடி மாவட்டங்களான சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் படிப்படியாக மழை துவங்கும்.

நாளை இரவு 8 மணிக்குள் பரவலாக அநேக இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதீத கனமழையும் பதிவாகும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

மிக்ஜம் புயல் போன்ற வெள்ளத்தை இம்மழை எற்படுத்தாது. குறுகிய நேரத்தில் அதீத மழை ஒருசில இடங்களில் பதிவாகக் கூடும்.

சாலைகளில் மழை நீர் தேங்கும், போக்குவரத்து பெரிதாக தாமதமாகும், பாதிப்படைய கூடும்.

தாழ்வான இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்படும்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் இன்று மாலை முதல் நாளை இரவு வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம்.

சென்னை புத்தகக் காட்சியில் பங்குபெறும் நண்பர்கள், சாலையோர வியாபாரிகள் தங்களது பொருட்களை பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறுகிய கால மிக கனமழைப்பொழிவை கருத்தில் கொண்டு நாளை (ஜன. 8) அலுவலகங்கள் செல்பவர்கள் வீடுகளில் இருந்து பணி செய்வது சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com