தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 ஜனவரி 2024, 4:19 pm

DIN


தென் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் (எக்ஸ்) பதிவில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. டெல்டா உள்பட தென் மாவட்டங்களில் அடுத்த 2 - 3 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையைப் போன்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய சுற்றுப்புற மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் சராசரியாக 2 செ.மீ. மழை பதிவாகும். தற்போது 2 - 3 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனால்,  இம்முறை 10 செ.மீ. மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.