
மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் படத்துக்கு மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நடிகரும், தே.மு.தி.க நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் பொதுமக்கள் உள்பட பலர், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த விஜயகாந்த்தின் இல்லத்திற்கு இன்று (ஜன. 8) நேரில் சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அங்கு வைக்கப்பட்டுள்ள அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் உள்பட அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர் பியூஷ் கோயலுடன் கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.