மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் எப்போது திறப்பு? அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா குறித்து அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை: மதுரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா குறித்து தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும்.

இந்த நிலையில், அலங்காநல்லூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற ஜனவரி 23 அல்லது 24-ஆம் தேதி திறந்து வைப்பார்.” என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் ரூ. 64 கோடியில், 77,683 சதுர அடி பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 5 ஆயிரம் போ் அமா்ந்து போட்டிகளைக் காணும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com