கன்னியாகுமரி ரயிலில் மே மாத முன்பதிவு நிறுத்திவைப்பு

கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் அறிவிப்பின்றி மே மாதத்துகான பயணச்சீட்டு முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் அறிவிப்பின்றி மே மாதத்துகான பயணச்சீட்டு முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் கன்னியாகுமரி விரைவு ரயிலில் (எண்: 12633/12634) மே 2-ஆம் தேதிக்கு பிறகு முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, பயணிகள் வசதிக்காகவும், ரயில்வே துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்திலும், சாதாரண படுக்கை வசதிகொண்ட பெட்டிகளுக்கு மாற்றாக மூன்றாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டிகளை இந்த ரயிலில் அதிக அளவில் சோ்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனா். அதுகுறித்த முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் முன்பதிவுகள் மீண்டும் திறக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com