பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

அதிக எண்ணிக்கையிலான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்


அதிக எண்ணிக்கையிலான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் 2024ஆம் ஆண்டுக்கான தேவி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய 11 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 

தேவி விருதுகள் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், 

பெண்கள் ஆண்களை விட ஆரோக்கியமானவர்கள். பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது குறித்த நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பதில்லை.

விமானிகள் அதிக எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். சந்திரயான் போன்ற திட்டங்களில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் இன்றும் பெண்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. 

குறைந்தபட்சம் சட்டம் மட்டுமே  தற்போது பெண்களைக் காக்கிறது. பெண்கள் மிகவும் தைரியமுடன் இருக்க வேண்டும். 

சவாலான சூழலில் அழாதீர்கள். என்னை தலைக்குனிய வைத்தால், நான் முன்பை விட வலிமையாக நடக்க வேண்டும் என எண்ணுவேன். 

நான் உயரத்தில் வேண்டுமானால் சிறியவளாக இருக்கலாம். ஆனால் திறமையில் மிகவும் உயரம். நம்மை காயப்படுத்தும் சமூகத்தில் நாம் மீண்டும் வலிமையுடன் நடைபோட வேண்டும்.

செய்யும் வேலையை முழு விருப்பத்துடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் உடலில் சோர்வு இருக்காது. புதுச்சேரிக்கும் தெலங்கானாவுக்கும் பணிநிமித்தமாக செல்கிறேன். அதனை முழு மனதுடன் செய்வதால் சோர்வு ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com