வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குரூப்4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது அநீதி: டிடிவி தினகரன்

குரூப்4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

News image
டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
Updated On :30 ஜனவரி 2024, 7:57 am

DIN

குரூப்4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்4 தேர்வுக்கான அறிவிப்பு இன்று (ஜன.30) வெளியிடப்பட்டது. 

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாவது, “பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்4 தேர்விற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வனக்காவலர் பணியிடங்களையும் சேர்த்து 6,244 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

இது குரூப்4 தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்யும் அநீதியாகும்.

அதே நேரத்தில், முன்னதாக நடைபெற்ற குரூப்4 தேர்வின் முடிவுகள் ஓராண்டுக்கு பின்னர் காலதாமதமாக அறிவிக்கப்பட்டதையும், அதில் ஒரே தேர்வு மையத்தில் பயின்ற ஏராளமான தேர்வர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார்களையும் கருத்தில் கொண்டு, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப்4 தேர்வை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்துவதில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முழு கவனம் செலுத்திட வேண்டும்.

மேலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கும் வகையில் குரூப்4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிடுவதோடு, நியாயமான முறையில் தேர்வை நடத்தி உரிய காலத்திற்குள் முடிவுகள் வெளியிடுவதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செயய் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.