
கம்பம்: கேரளத்திலிருந்து தமிழகம் நோக்கி வந்த லாரி கம்பம்மெட்டு மலைச்சாலையில் கவிழ்ந்ததால் புதன்கிழமை காலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து தமிழகம் நோக்கி மிளகு தோல் கழிவு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கம்பமமெட்டு மலைச்சாலை வழியாக புதன்கிழமை அதிகாலை வந்தது கொண்டிருந்தது.
லாரி இரண்டாவது கொண்ட ஊசி வளைவில் இறங்கும்போது அதிக பாரம் ஏற்றியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் மேலே வந்த வாகனங்கள், கீழே இறங்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சிறிய ரக வாகனங்கள் மட்டும் சென்று வர அந்த பகுதியில் இருந்தவர்கள் செய்த ஏற்பாட்டின்படி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்றன.கன ரக வாகனங்கள் செல்லமுடியாமல் மலைச்சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.