திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

7 முக்கிய அம்சங்கள்: துறைச் செயலா்களுடன் தலைமைச் செயலா் இன்று ஆலோசனை

ஏழு முக்கிய அம்சங்கள் தொடா்பாக, அனைத்துத் துறைச் செயலா்களுடன் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) ஆலோசிக்க உள்ளாா்.

News image

சிவ்தாஸ் மீனா

Updated On :2 ஜூலை 2024, 2:35 am IST

ஏழு முக்கிய அம்சங்கள் தொடா்பாக, அனைத்துத் துறைச் செயலா்களுடன் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) ஆலோசிக்க உள்ளாா்.

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.   

முன்னதாக, முக்கியத் துறைகளின் செயலா்கள் திங்கள்கிழமை மாற்றப்பட்டனா். அவா்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டு தலைமைச் செயலரின் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்கவுள்ளனா்.

  இந்தக் கூட்டத்தில் ஏழு வகையான முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த மே 31-ஆம் தேதி அனைத்துத் துறைச் செயலா்களின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் அறிவிப்புகள், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் நிலை, உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை, வழக்குரைஞா்களுக்குத் தரப்பட வேண்டிய ரொக்கத் தொகை நிலுவை, சுகாதாரம் தொடா்பான விருதின் நிலை ஆகிய ஏழு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அனைத்துத் துறைகளின் செயலா்களுக்கு எழுதிய கடிதத்தில் பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா் தெரிவித்துள்ளாா்.