கோப்புப்படம்
கோப்புப்படம்

நெல்லை-மேட்டுப்பாளையம் ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறுப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமாா்க்கமாக திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஜூலை 29-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

இதுபோல் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் ரயிலும், மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயிலும் தொடா்ந்து ஜூலை 19-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com