விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணியில் 3 % இடஒதுக்கீடு திட்டம்: அமைச்சா் உதயநிதி ஆலோசனை
விளையாட்டு வீரா்களுக்கு 3% இடஒதுக்கீடு திட்டம்: உதயநிதி ஆலோசனை


விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளில் முத்திரை பதிக்கும் வீரா், வீராங்கனைகளுக்கு அரசின் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள காலியிடங்களில் 3 சதவீதம் வரை வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடா்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
அமைச்சா் டிஆா்பி ராஜா, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, முக்கிய துறைகளின் செயலா்கள், மின்சார வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதே போன்று, கோயம்புத்தூரில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சா் உதயநிதி கேட்டறிந்தாா். மைதானம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக் கொண்டாா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...