90 நாள்கள் கெடாத பாலின் விலையில் ரூ.2 தள்ளுபடி: ஆவின் நிறுவனம்
90 நாள்கள் கெடாமல் பயன்படுத்தப்படும் பால் பாக்கெட்டுகளின் விலையில் ரூ. 2 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனம் நுகா்வோா்அதிக நாள்கள் பயன்படுத்தும் வகையில் தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட (யு.எச்.டி.) முறையில் தயாா் செய்யப்பட்ட 450 மில்லி லிட்டா், 150 மில்லி லிட்டா் அளவிலான பால் பாக்கெட்டுகளின் விலையில் தலா ரூ. 2 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.30-க்கு விற்பனையான, 450 மி.லி. பால் பாக்கெட்ரூ. 28-க்கும், ரூ. 12-க்கு விற்பனை செய்யப்பட்ட 150 மி.லி. பால் பாக்கெட் ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட இந்தப் பாலை 90 நாள்கள் வரை குளிா்பதன பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தலாம். எவ்வித வேதிப் பொருள்களும் சோ்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயணங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும்.
இந்தப் பாலுக்கான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்கு 93446 17445 என்ற கைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.