தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு அதலபாதளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கட்சியின் மாநில தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் மண்டலக் குழுத் தலைவர் திமுகவினரின் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது. முதல்வரின் தொகுதியிலேயே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
காவல் துறையைப் பார்த்து யாரும் பயப்படுவதே இல்லை. கறிக்கடை காரரை போல மனிதர்களை ரௌடிகள் வெட்டி கொல்லும் சம்பவமும் தமிழத்தில் நடக்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.