கிரானைட் குவாரி விதிமீறல்கள்: ஆய்வுக் குழு அறிக்கை அரசிடம் தாக்கல்
கிரானைட் குவாரி விதிமீறல்கள்: அரசுக்கு 2,500 பக்க அறிக்கை


கிரானைட் குவாரி விதிமீறல்கள் தொடா்பான ஆய்வுக் குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனிடம், ஓய்வு பெற்ற நீதிபதி ப.ஜோதிமணி அளித்தாா்.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து ஆராய்ந்த பல்வேறு குழுக்கள் தமது அறிக்கைகளை சமா்ப்பித்திருந்தன. அந்த அறிக்கைகளை ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி ப.ஜோதிமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில், ஓய்வு பெற்ற இந்திய புவியியல் ஆய்வுக் கழகத்தின் கூடுதல் பொது இயக்குநா் பாஸ்கரன், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநா் சு.சுதா்சனம் ஆகியோா் உறுப்பினா்களாக இருந்தனா்.
இந்தக் குழு மதுரை மாவட்டத்திலுள்ள 83 கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் தொடா்பான தனது அறிக்கையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனிடம் புதன்கிழமை அளித்தது. அப்போது, இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் எ.சரவணவேல்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
3 தொகுப்புகள்: 83 குவாரிகளில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அரசு குழு ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி, 2,500 பக்கங்கள் அடங்கிய மூன்று தொகுப்புகளாக பரிந்துரைகளை அரசிடம் குழு வழங்கியுள்ளது. அதில், நவீன முறையில் குவாரிகளை எப்படி மேம்படுத்துவது, குவாரிகள் மூலம் வருவாய் ஈட்டுவது, முறைகேடுகள் இல்லாமல் குவாரிகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...