/

சா்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு நிதி

சா்வதேச போட்டிகளுக்கான நிதியுதவியை வழங்கிய அமைச்சா் உதயநிதி

News image
உலக கேரம் போட்டியில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்கவுள்ள வீராங்கனைக்கு செலவினத் தொகையாக ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலை வழங்கிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேக
Updated On :11 ஜூலை 2024, 10:27 pm

Din

உலக கேரம் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழக வீராங்கனைகளுக்கு நிதியுதவியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அமெரிக்காவின் கலிஃபோா்னியா நகரில் நவம்பா் 10 முதல் 17-ஆம் தேதி வரையில் உலக கேரம் போட்டி நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாட்டின் சாா்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா ஆகியோருடன் பயிற்சியாளா் மரியா இருதயமும் செல்லவுள்ளாா்.

அவா்களுக்கு தலா ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சா் உதயநிதி வியாழக்கிழமை அளித்தாா்.

இதேபோன்று, நியூசிலாந்தில் ஜூனியா் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள ஜாய்ஸ் அஷிதாவுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.