அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியது: ஜெயக்குமார்
எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளதாக ஜெயக்குமார் பேட்டி.


அண்ணாமலை என்றகின்ற வேதாளம் தற்பொழுது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் ஜெயகுமார் மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகேன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:
மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்கள் வெள்ளையனுக்கு எதிராக குரல் கொடுத்தவர். வெள்ளையனுக்கு அடிப்படையாமல் வாழ்ந்த முதல் வீரர் அழகு முத்துகோன்தான். அழகு முத்துகோனை சிறை பிடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி, தன்னுடன் இருக்கும் நபர்களை காட்டிகொடுக்க வேண்டும் என கூறியும் தன் தலையே போனாலும் சரி காட்டிக் கொடுக்கக்காமல், அந்த துரோகத்தை நான் செய்ய மாட்டேன் எனக் கூறினார், அவர் அந்த அளவுக்கு உறுதியோடு இருந்தார். வீரனாகப் பிறந்து வீரனாகவே வாழ்ந்தார் எனத் தெரிவித்தார்.
ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார். ஓபிஎஸ் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தட்டவர் கிடையாது. டிடிவி இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது.
பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே இடித்து உடைத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் அதனை கோவிலாக நினைக்கிறோம். கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் அவரிடம் கிடையாது எனத் தெரிவித்தார்.
மேலும், சசிகலா குறித்த கேள்விக்கு, கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி கட்சி இணைக்க முடியும். அது முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பதற்கு சமம் என பதில் அளித்தார்.
அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகிறது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்படுகிறார்.
முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை எனவும் தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் பிரச்சனை இல்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாற்றினால் தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்.
விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்க கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது என குற்றம்சாட்டி உள்ளார்.
அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...