சென்னை சென்ட்ரலில் இருந்து ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் ( புட்டபா்த்தி) செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை முதல் சிவமொகாவுக்கு இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்துக்கு வெள்ளிக்கிழமைதோறும் விரைவு ரயில் (எண்: 12691) இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முதல் பெங்களூரு கன்டோன்மென்ட்- ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் இடையே முழுவதுமாக இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு முனையம், துமகுரு, டிப்துா், அரசிகோ், கடூா், பிரூா், தரிகோ், பத்ரவதி வழியாக சிவமொகா டவுன் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக சிவமொகா டவுனில் இருந்து சனிக்கிழமை (ஜூலை 13) முதல் இந்த ரயில் சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


