கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா?: முதல்வர் ஸ்டாலின் கேள்வி

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு தடைகளை உடைக்கத் தயாராக உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் உரை.
முதல்வர் ஸ்டாலின் உரை.
Published on
Updated on
1 min read

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்த பின் அவர் ஆற்றிய உரையில், மிக, மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன். பெற்றோரின் பாசத்தோடு நான் உருவாக்கிய திட்டம்தான் காலை உணவுத்திட்டம். பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டம்தான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது.

பல்வேறு திட்டங்கள் மூலம் உங்களுக்கு பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம். சங்க இலக்கியத்தில் பசிப் பிணி போக்குவது குறித்து பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள்தான் எதிர்காலத்தின் சொத்து என்பதால் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வரப்பிரசாதம்.

முதல்வர் ஸ்டாலின் உரை.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்

காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. மக்கள் நலத்திட்டங்களை பார்த்து, பார்த்து அரசு செயல்படுத்தி வருகிறது. நமது அரசு ஒருநாளாவது செயல்படாமல் இருந்திருக்கிறதா?. நாள்தோறும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம். பொய் செய்திகளை பரப்பி அதில் குளிர்காய நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் அஜன்டா பலிக்காது.

மாணவர்கள் படிப்பதற்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதே எனது எண்ணம். தமிழக மாணவர்கள் கல்வி பயில எந்த ரூபத்தில் தடை வந்தாலும், அதை தமிழக அரசு உடைக்கும். பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ அது எந்த தடையாக இருந்தாலும் தகர்ப்போம். ஒன்றிய பாஜக அரசு அரசியலுக்காக அவசர நிலையை பற்றி இப்போது நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறது.

ஆனால், அவசர நிலையின்போது, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, ஒன்றிய அரசு தற்போது மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?. இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?. நீட் தேர்வை பல தலைவர்கள், மாணவர் அமைப்புகள் தற்போது எதிர்த்து வருகின்றன. தமிழகம் நீட் தேர்வை எதிர்த்தபோது முதலில் கேள்வி எழுப்பியர்கள் கூட தற்போது ஆதரிக்கின்றனர்.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் யாரும் திருட முடியாத சொத்து என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com