36 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் மேலும் 36 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் மேலும் 36 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் அவ்வபோது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் உள்துறை செயலாளர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது 36 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையின் ஆணையர் ஜெயகாந்தன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம்.
மீன்வளத்துறை மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம்.
ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமனம்.
மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம்.
இந்து அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக மாற்றம்.
இந்து அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பி.என். ஸ்ரீதர் நியமனம்.
நெல்லை மாநகராட்சி ஆணையர் தாகரே சுபம், வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம்
புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலன் திட்ட இயக்குநராக மாற்றம்.
நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழந்தைகள் நலன் திட்ட இயக்குநராக மாற்றம்.
கடலூர் ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக சீர்திருத்த துறை செயலாளராக இருந்த ஆப்ரகாம் தொழில்நுட்ப கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
போக்குவரத்துத் துறை ஆணையராக இருந்த சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குனராக மாற்றம்
ஊரக வளர்ச்சி துறை இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி சரண்யா நியமனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...