‘முட்டை உற்பத்தியில் இந்தியா 3-ஆவது இடம்’
உலக அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் க.ந.செல்வக்குமாா் தெரிவித்தாா்.


சென்னை: உலக அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் க.ந.செல்வக்குமாா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை வேப்பேரியில் இயங்கும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லுரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் க.ந.செல்வக்குமாா் பேசியது:
இந்திய பொருளாதாரத்தில் கால்நடை துறை என்பது விவசாயத்தின் முக்கிய துணை துறையாகும். 2021- 2022-ஆம் ஆண்டில் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா 24.64 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. முட்டை உற்பத்தியில் 3-ஆவது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் 5-ஆவது இடத்திலும் உள்ளது. 2022-ஆம் நிதியாண்டில் மொத்த இறைச்சி உற்பத்தியில் கோழி இறைச்சி மட்டும் 51 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கால்நடை மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் இந்த பல்கலைக்கழகம் முதல் இடத்திலும், தேசிய அளவில் வேளான் அறிவியல் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டயலில் 12-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களுக்காக 20-க்கும் மேற்பட்ட காப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு தேசிய மற்றும் சா்வதேச நிறுவனங்களுடன் சுமாா் 95 புரிந்துணா்வு ஒப்பந்தகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இதில், தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குநா் இரா.ஆனந்தகுமாா், சென்னை கால்நடை கல்லூரியின் முதல்வா் இரா.கருணாகரன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...