
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, பந்தலூர், கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வால்பாறையிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், கனமழையால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோலையாறு பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





