சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தனியாா் நிறுவனங்களில் தமிழா்களுக்கு 80 % பணிகள்: அன்புமணி கோரிக்கை

தனியாா் நிறுவனங்களில் 80 சதவீதப் பணிகளை தமிழா்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்
Updated On :17 ஜூலை 2024, 9:00 pm

Din

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கா்நாடகத்தில் தனியாா் நிறுவனங்களில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் முழுக்க கன்னடா்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், கா்நாடகத்தில் தமிழா்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் தமிழா்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் இனி பறிக்கப்பட்டுவிடும்.

இந்த நிலையை மாற்றி, தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞா்கள், இளம்பெண்களுக்கு வழங்க வேண்டும். இதை வழங்குவதற்காக சட்டம் இயற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

எனவே, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ. 40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 சதவீதத்தை தமிழக இளைஞா்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதைக் கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.