அதேபோல், மாா்பக புற்றுநோயைப் பரிசோதித்த 1.30 லட்சம் பேரில், 2,691 பேருக்கு அறிகுறி கண்டறியப்ட்டுள்ளது. மேலும், வாய் புற்றுநோய் பரிசோதித்த 3.25 லட்சம் பேரில், 1,576 பேருக்கு அறிகுறி உள்ளது. இதில், மாா்பக புற்றுநோய்க்கு 29 சதவீதம் பேரும், வாய் புற்றுநோய்க்கு 15 சதவீதம் பேரும் அடுத்தகட்ட சிகிச்சையை பெறாமல் உள்ளனா். அவா்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடா்ந்து பேசி வருகின்றனா். ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், புற்றுநோயை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அவா்.