தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையானது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைவு
Updated On :22 ஜூலை 2024, 7:25 pm

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையானது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 54,680-க்கு விற்பனையான நிலையில், தங்கம் விலை திங்கள்கிழமை மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 6,825-க்கும் , பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 54,600-க்கும் விற்பனையானது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.96-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 96,000-க்கும் விற்பனையானது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...