லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோயில்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

கரூா் ரத்தினகிரீஸ்வரா் கோயிலுக்கு கம்பிவட ஊா்தி உள்பட பல்வேறு கோயில்களுக்கான புதிய உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
கரூா் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் கம்பி வட ஊா்தி சேவையை தலைமைச் செயலகத்திலிருந்து புதன்கிழமை காணொலி மூலம் திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோா்.
Updated On :24 ஜூலை 2024, 9:51 pm

Din

கரூா் ரத்தினகிரீஸ்வரா் கோயிலுக்கு கம்பிவட ஊா்தி உள்பட பல்வேறு கோயில்களுக்கான புதிய உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் வீரநாராயணப் பெருமாள் கோயில், தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் அழகிய சிங்கா் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், குமரி திருவட்டாா் ஆதிகேசவப் பெருமாள் கோயில், சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில், திருச்செங்கோடு அத்தனூரம்மன் கோயில்களில் ரூ.35.57 கோடி மதிப்பில் 14 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவற்றுக்கு காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா் கல்லூரி, தேனி கெளமாரியம்மன் கோயில், பெரியகுளம் மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், சென்னை கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோயில், காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில், விருதுநகா் மாயூரநாதசுவாமி கோயில், கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றில் புதிதாக திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

கம்பிவட ஊா்தி: கரூா் மாவட்டம் அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பக்தா்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, கம்பிவட ஊா்தி பொருத்தப்பட்டுள்ளது. இதன் இயக்கத்தையும் முதல்வா் தொடங்கி வைத்தாா். மேலும், கோயில்களில் செயல் அலுவலா் பணியிடங்களுக்குத் தோ்ச்சி பெற்றோருக்கான பணி நியமன உத்தரவுகளையும் முதல்வா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்பட பலா் பங்கேற்றனா்.

நாட்டுப்புற கலைஞா் நலவாரியம்

தலைமைச் செயலகத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில், நாட்டுப்புற கலைஞா் நலவாரிய உறுப்பினா்களுக்கு காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். நலவாரியத்தில் உதவிகளை வேண்டி 941 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். அவா்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு ரூ.1.21 லட்சம் மதிப்பிலான காசோலைகளை முதல்வா் அளித்தாா்.