ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தோற்கடித்தவர்களை பழிவாங்க வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலில் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :24 ஜூலை 2024, 3:13 pm IST

தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

அரசியல் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அரசை நடத்தினால் தனிமைப்பட்டுப்போவீர்கள் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட் உரையில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, நாட்டைக் காப்பாற்றாது என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே…

“தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் 2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.