தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் ரயில்கள் ரத்து!

கேரளத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் ரயில் சேவை பாதிப்பு

Train

கோப்புப் படம். - Din

Published On :30 ஜூலை 2024, 11:45 am IST

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் இரண்டு விரைவு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளங்களில் நிலச்சரிவும், வெள்ள நீரும் தேங்கியும் இருப்பதால் பல இடங்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட வள்ளத்தோள் நகர்-வடக்கஞ்சேரி ரயில் நிலையத்துக்கு இடையே தண்டவாளம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் 20 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் விவரம்:

ரயில் எண்: 16791 பாலருவி விரைவு ரயில்

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட இந்த ரயில், பாலக்காடு செல்ல வேண்டிய அலுவா ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. அலுவா - பாலக்காடு இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்: 16792 பாலருவி விரைவு ரயில்

பாலக்காடு சந்திப்பில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று புறப்பட வேண்டிய ரயில், அலுவா ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.05 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்: 16649 பரசுராம் விரைவு ரயில்

மங்களூரு சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இன்று புறப்பட்ட விரைவு ரயில், சொரனூர் சந்திப்புடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொரனூர் - கன்னியாகுமரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண்: 16650 பரசுராம் விரைவு ரயில்

கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 31 புறப்பட வேண்டிய பரசுராம் ரயில், சொரனூர் சந்திப்பில் இருந்து நாளை பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம் - Southern Railway

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம் - Southern Railway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.