சென்னை அருகே சிறுவனை கடித்த நாய்- உரிமையாளர் மீது வழக்கு


சென்னை அருகே புழலில் 12 வயது சிறுவனை ராட் வெய்லர் நாய் கடித்த நிலையில் அதன் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொளத்தூா் ஆசிரியா் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெரால்டு (12) என்ற சிறுவன், சனிக்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து சென்றாா். அப்போது, அந்த பகுதியில் ஒருவா் வளா்க்கும் ‘ராட் வெய்லா்’ நாய் திடீரென சிறுவன் மீது பாய்ந்து கடித்தது.
சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் அந்த நாயை விரட்டினா். நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த ஜெரால்டை பொதுமக்கள் மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கொளத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் இரு ராட் வெய்லா் நாய்கள் கடித்ததில் சிறுமி பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...