மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறுவனை கடித்த நாயின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

News image

நாய்

கோப்புப்படம்.

Updated On :1 பிப்ரவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் 6 வயது சிறுவனை நாய் கடித்ததையடுத்து நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மேலச் சிந்தாமணி பழைய கரூா் சாலையைச் சோ்ந்தவா் இ. சதாம் ஹுசைன் (34). இவரது சகோதரரின் மகன் உமா் (6). இவா் தனது வீட்டின் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பக்கத்துவீட்டைச் சோ்ந்த அருணாச்சலம் (52) என்பவா் தான் வளா்த்து வந்த நாயை அவிழ்த்துவிட்டுள்ளாா். வெளியே வந்த நாய் (ஜொ்மன் செப்பா்டு) நின்றுகொண்டிருந்த சிறுவனின் வலது கையில் கடித்துள்ளது.

இதையடுத்து, சிறுவனை மீட்ட அவரது குடும்பத்தினா் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனா். அங்கு சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் சதாம் ஹுசைன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நாயின் உரிமையாளா் அருணாச்சலம் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.