
விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜுன் 4) எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், விளவங்கோடு பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் 13,155 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வி.எஸ். நந்தினி 5,066 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இவர் கத்பட்டை விட 8089 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் யு.ராணி 941 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெமினி 903 வாக்குகளையும் பெற்றுள்ளார். (12.30 மணி நிலவரம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.