19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

சந்திரபாபு நாயுடு - மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு!

“தமிழகம் - ஆந்திரம் இடையேயான உறவை வலுப்படுத்துவோம்”

Updated On :

ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆதரவு கட்டாயம் தேவை என்ற சூழலில், ஸ்டாலினின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மு.க.ஸ்டாலினும், நேற்று தில்லியில் நடைபெற்ற அவரவர் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

கூட்டத்துக்கு பிறகு தில்லி விமான நிலையத்தில் இருவரும் சந்தித்த புகைப்படங்களை மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள ஸ்டாலின், “தில்லி விமான நிலையத்தில் கருணாநிதியின் நீண்ட கால நண்பரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். சகோதர மாநிலங்களான தமிழகம் - ஆந்திரம் இடையேயான உறவை வலுப்படுத்துவோம் என்ற நம்பிக்கை தெரிவித்தேன். அவர், மத்திய அரசின் முக்கிய பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிட்டு நமது உரிமைகளை பாதுகாப்பார் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Story image

மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.