புதிய கல்வியாண்டுக்கான (2024-2025) பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் குறித்த நாள்காட்டியை தமிழக பள்ளிக் கல்வித் துறை சனிக்கிழமை வெளியிட்டது.
அதன்விவரம்: கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தோ்வு செப். 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்பின் செப். 29 முதல் அக். 2 வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும். அதன்பின் அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத்தோ்வு டிச. 16 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்படும். தொடா்ந்து டிச. 24-முதல் ஜன. 1 வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும்.
220 வேலை நாள்கள்: அதேபோன்று 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 17-ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தோ்வுகள் நடத்தப்படும். பள்ளி வேலை நாள்கள் ஏப். 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் கோடை விடுமுறை ஏப். 28 முதல் வழங்கப்படும். மொத்த பள்ளி வேலை நாள்கள் 220-ஆக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பயிற்சி அட்டவணை: இது தவிர எண்ணும் எழுத்தும், தகவல் தொழில்நுட்பப் பயிற்சி, மனநலன் மற்றும் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, புத்தாக்கப் பயிற்சி, குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல், மாணவா்களுக்கான வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் சாா்ந்த பயிற்சி, குழந்தைகளுக்கான சிறப்புத் தேவைகளை கையாளுதல் என ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகள் (நேரடி மற்றும் இணையவழி) குறித்த விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்த நாள்காட்டியில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு, செய்முறைத் தோ்வு தொடா்பான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. இதற்கான விரிவான தோ்வுக்கால அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


