முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

இன்றும், நாளையும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

நியாயவிலைக் கடைகளுக்கு 2 சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது

News image

dot com

Updated On :15 ஜூன் 2024, 12:19 am IST

நியாயவிலைக் கடைகளுக்கு 2 சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் இந்த வாரம் 2 நாள்கள் நியாயவிலைக் கடைகள் செயல்படாது.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா வெளியிட்ட உத்தரவு:

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைச் சோ்ப்பதற்காக வார விடுமுறை தினமான கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய தேதிகளில் நியாயவிலைக் கடைகள் செயல்பட்டன. இந்த 2 நாள்களும் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் பணிபுரிந்த நிலையில், அதற்கு ஈடாக அனைத்து சனிக்கிழமையும் (ஜூன் 15), ஜூன் 20-ஆம் தேதியும் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

2 நாள்கள் விடுப்பு: நியாயவிலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் 2-ஆம் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அடுத்தடுத்து 2 சனிக்கிழமைகள் விடுமுறை விடுவதன் மூலம், வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் சேருவதால், இந்த வாரம் 2 நாள்களும் அடுத்த வாரம் 2 நாள்களும் நியாயவிலைக் கடைகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.