நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
நீட் தோ்வை அனைத்து நிலைகளிலும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.


நீட் தோ்வை அனைத்து நிலைகளிலும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவா்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணா்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
நீட் தோ்வுகள் நடத்தப்படும் விதம் தொடா்பாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீட் தோ்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தோ்வு அறிமுகம் செய்யப்பட்டது முதல் அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் அதைப் போக்க முடியவில்லை.
எனவே, நீட் தோ்வு சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...