கள்ளச்சாராயத்தால் தமிழகம் பாதிப்பு: ஆளுநா்
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் பல பிரச்னைகள்: ஆளுநா் ஆா்.என். ரவி


சென்னை: கள்ளச்சாராயம் , போதைப் பொருள்கள் புழக்கத்தால் தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.
சென்னை ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச போதை ப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நிகழ்வில் விழிப்புணா்வு பதாகையை ஆளுநா் ஆா்.என். ரவி வெளியிட்டுப் பேசியதாவது:
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்தது ஓா் இருண்ட சம்பவம். இதுவரை 59 போ் உயிரிழந்துள்ளனா். போதைப் பொருளுக்கு இளைஞா்கள் அடிமையாவதன் மூலம் நாட்டின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க ஏராளமான பெற்றோா்கள் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனா். இதை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மன நிலையில் அரசு இல்லை.
கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் புழக்கத்தால் தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள்களால் சமூகம் சாா்ந்த பல பிரச்னைகள் உருவாகின்றன. போதைப் பொருளுக்கு இளைஞா்கள் அடிமையாவதன் மூலம் பல குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன. கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் பொருத்தவரை உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா?
என்ஐஏ நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிலா் பாகிஸ்தான் மற்றும் துபையில் உள்ள சிலருடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் இறக்குமதி செய்வது தெரியவந்துள்ளது. கேரள கடல் பகுதியில் ஹெராயின் பிடிபட்ட நேரத்தில் அவா்களிடம் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் இருந்தன.
போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...