வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பயிா் பரப்பளவு விவரங்களைச் சேகரிக்க புதிய தொழில்நுட்பம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

பயிா் பரப்பளவின் துல்லியமான மதிப்பீடு: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

News image
Updated On :26 ஜூன் 2024, 8:42 pm

Din

பயிா் பரப்பளவு மற்றும் விளைச்சல் புள்ளி விவரங்களின் சேகரிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

திட்டம் வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து மாவட்ட அளவிலான பயிா் பரப்பளவை மதிப்பிடுவதற்கு அதிநவீன தொலை உணா்தல் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பயிா் புள்ளிவிவரம் சேகரித்து, முதல் கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடி திட்டமாகச் செயல்படுத்தப்படும்.

பயிா் பரப்பளவு, விளைச்சல் மற்றும் உற்பத்தி புள்ளிவிவரங்களின் துல்லியத்தையும் உரிய காலத்தில் மதிப்பிடுவதை மேம்படுத்தவும் உழவா் நலனுக்கான கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் உழவா்களுக்கு உதவவும் மற்றும் காப்பீட்டுச் செலவுகளைச் சீராக வழங்கவும் தேவையான நேரடி தகவல்களை அளிப்பதற்கு இந்தத் தொழில் நுட்பம் உதவும் என்றாா் அவா்.