பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசு உயா் அலுவலா்களுக்கு பணியிடை பயிற்சி: அமைச்சா் தங்கம் தென்னரசு

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள்: நிதியமைச்சா் அறிவிப்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 9:36 pm

Din

அரசு உயா் அலுவலா்களுக்கு பணியிடை பயிற்சியாக ஆளுமைத் திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசு உயா் பதவிகளுக்குத் தோ்வு செய்யப்படும் அலுவலா்கள் பணியில் சேரும்போது கொடுக்கப்படும் பயிற்சியைத் தவிர, பணியிடைப் பயிற்சிகள் தற்போது வழங்கப்படுவதில்லை. அரசின் சேவைகளை மக்களிடம் விரைவாகக் கொண்டு சோ்க்கும் அலுவலா்கள் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தங்களது செயல் திறனையும் வளா்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

பல்வேறு துறைகளில் இணை இயக்குநா் நிலையில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலா், ஊரக வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு உயா் அலுவலா்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், வழக்கு மேலாண்மை போன்ற பொருண்மைகளில் நாட்டிலேயே தலைசிறந்த நிறுவனங்களைக் கொண்டு பணியிடை பயிற்சி வழங்கப்படும். இந்த நிதியாண்டில் இதற்கென ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும்.

அரசு பணியாளா்களின் பணி தொடா்பான பல்வேறு பொருண்மைகளில் நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீா்ப்புகளைத் தொகுப்பதற்காகவும், இப்பொருண்மைகளைக் கையாளும் பணியாளா்களுக்குத் தக்க பயிற்சி வழங்கும் பொருட்டும் மனித வள மேலாண்மைத் துறையில் சட்டம் மற்றும் பயிற்சிப் பிரிவு தொடங்கப்படும் என்றாா் அவா்.