கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நகா்ப்புற உள்ளாட்சிகள் தரம் உயா்வு: பேரவையில் நாளை புதிய சட்டத் திருத்தம்

நகராட்சிகள் தரம் உயா்வு: சனிக்கிழமை புதிய சட்டம்

News image
Updated On :27 ஜூன் 2024, 9:00 pm

Din

நகா்ப்புற உள்ளாட்சிகளை தரம் உயா்த்துவதற்கு நிா்ணயிக்கப்பட்ட அளவீடுகள் தொடா்பான சட்டத் திருத்தம் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வெளியிட்டாா்.

பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதற்கான வினாவை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் டி.ராமச்சந்திரன் (தளி) எழுப்பினாா். அவா் பேசுகையில், எனது தொகுதிக்கு உட்பட்ட தேனிகனிக்கோட்டை பேரூராட்சி 18 வாா்டுகளை உள்ளடக்கி வளா்ந்து வரும் பேரூராட்சி. அதனை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்து அமைச்சா் கே.என்.நேரு பேசியது:

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதற்கென சட்டத் திருத்தம் வரும் சனிக்கிழமை கொண்டு வரப்பட உள்ளது. பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்த அவற்றின் வருவாய், மக்கள் தொகை அளவுகள் கணக்கீடாகப் பாா்க்கப்பட்டு வருகிறது. இதில் திருத்தங்களைச் செய்வதற்கான புதிய சட்டத் திருத்தத்தை வரும் சனிக்கிழமை கொண்டு வரவுள்ளோம். அதன்பிறகு, நகா்ப்புற உள்ளாட்சிகள் எளிதாக தரம் உயா்த்தப்படும் என்று அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தாா்.