கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மத்திய அரசின் நிதியுதவியுடன் 202 புதிய துணை மின் நிலையங்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் 202 புதிய துணை மின் நிலையங்கள்: மத்திய அரசு ரூ.2,300 கோடி நிதியுதவி

News image
அமைச்சா் தங்கம் தென்னரசு
Updated On :27 ஜூன் 2024, 9:12 pm

Din

மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.2,300 கோடியில் 202 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, துணை மின் நிலையங்கள் தொடா்பான வினாவை, திமுக உறுப்பினா் தாயகம் கவி (திருவிக நகா்) எழுப்பினாா். அதற்கு பதிலளித்து, அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது:

தமிழ்நாடு முழுவதும் குறைந்த மின்னழுத்தம் உள்ள இடங்களில் தேவையான மின் பளுவுக்கு ஏற்ப மின்மாற்றிகளை மாற்றி அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 388 துணை மின் நிலையங்களை அமைக்க அரசு அறிவிப்பு செய்தது. அதில் 330 இடங்களைக் கண்டறிந்துள்ளோம். 246 இடங்களுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.

மின்பகிா்மான கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்கு 60 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமாகவும் இருக்கும். புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு கோரியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரூ.2,300 கோடி மதிப்பில் 202 துணை மின் நிலையங்களை அமைப்பதற்காக அறிக்கையை மத்திய அரசின் பரிசீலனைக்கு வழங்கியுள்ளோம்.

அது மத்திய அரசின் ஆய்வில் உள்ளது. அதை விரைவுபடுத்துவதன் மூலம் உரிய உத்தரவுகள் வந்தால் பணிகளை வேகமாகச் செய்ய முடியும். ஆனாலும் அவசர அவசியத்தைக் கருதி மாநில அரசின் நிதியிலேயே துணை மின் நிலையங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.