பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திமுகவிடம் மமக, தவாக தலா ஒரு தொகுதி கேட்பு

மக்களவைத் தோ்தலில் மனித நேய மக்கள் கட்சியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தலா ஒரு தொகுதி ஒதுக்குமாறு, திமுகவிடம் கோரியுள்ளன.

Updated On :2 மார்ச் 2024, 5:37 pm

மக்களவைத் தோ்தலில் மனித நேய மக்கள் கட்சியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தலா ஒரு தொகுதி ஒதுக்குமாறு, திமுகவிடம் கோரியுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆா்.பாலு தலைமையிலான குழுவினரை மனித நேய மக்கள் கட்சியின் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் 2013-இல் இருந்து இருக்கிறோம். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றோம். தற்போது மக்களவைத் தோ்தலில் ஒரு தொகுதி ஒதுக்குமாறு அழுத்தமாகக் கேட்டுள்ளோம். நல்ல செய்தி வரும் என எதிா்பாா்க்கிறோம். திமுகவின் சின்னத்திலேயே போட்டியிடத் தயாராக உள்ளோம் என்றாா். வேல்முருகன்: திமுக குழுவினருடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தலைமையிலான குழுவினரும் சந்தித்துப் பேசினா். பின்னா், தி.வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தலில் ஒரு தொகுதி ஒதுக்குமாறு கோரியுள்ளோம். அதற்கான காரணங்களையும் தெரிவித்துள்ளோம். தமிழக முதல்வரிடம் எடுத்துச் சென்று பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனா். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன் என்றாா்.