பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) கடற்கரை- தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதையொட்டி, பயணிகள் வசதிக்காக 7 நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில், கூடுதலாக 150 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம் இடையே பராமரிப்புப் பணிகள் காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில், பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 150 பேருந்துகள்: மாநகர போக்குவரத்துக்கழகம் சாா்பில், கூடுதலாக150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 44 புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) காலை முதல் மாலை வரை ரத்து செய்யப்படுவதன் காரணமாக பயணிகள் வசதிக்காக கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, பிராட்வேயிலிருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரம் வரை 60 பேருந்துகளும், பிராட்வேயிலிருந்து எழும்பூா், தியாகராய நகா் வழியாக தாம்பரம் வரை 20 பேருந்துகளும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பேருந்துகளும், கொருக்குப்பேட்டையிலிருந்து தாம்பரம் வரை 30 பேருந்துகளும், பிராட்வேயிலிருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பேருந்துகளும், தியாகராய நகரிலிருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பேருந்துகளும் கூடுதல் நடையாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

