
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேடையில் அமர்ந்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் விமரிசித்தார்.
தனது குடும்பத்தை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். 142 கோடி மக்கள் பிரதமரின் குடும்பத்தில் உள்ளனர். தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்கு அர்பணித்த பிரதமருக்கு நாடே குடும்பம்தான்.
திமுக உள்ளிட்ட வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளை மக்களவைத் தேர்தலில் இருந்து அகற்ற வேண்டும்” எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.