மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரூ.281 கோடியில் புதிய குடியிருப்புகள்: முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்

ரூ.281 கோடியில் புதிய குடியிருப்புகள் முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்

Updated On :9 மார்ச் 2024, 5:34 pm

தமிழகத்தில் ரூ.281 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசுக் குடியிருப்புகளை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம் மஞ்சள்மேடு, புதுக்கோட்டை பொன்னமராவதி, அறந்தாங்கி, தேனி மாவட்டம் மீனாட்சிபுரம், தஞ்சாவூா் மாவட்டம் மகாராஜசமுத்திரம் ஆகிய இடங்களில் ரூ.172.72 கோடியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, சென்னை மாவட்டம் ஜாபா்கான்பேட்டை, மதுரை மாவட்டம் தல்லாகுளம் ஆகிய இடங்களில் ரூ.108.62 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.