வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை(மார்ச் 17) கடைசி நாள்

சத்யபிரத சாகு
சத்யபிரத சாகு

18 வயது நிரம்பியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே(மார்ச் 17) கடைசி நாள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கியிருந்த மக்களவைத் தேர்தல் தேதி இன்று(மார்ச் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினமே விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மார்ச் 20 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 27 ஆகும்.

மார்ச் 28 அன்று வேட்புமனு மறுபரிசீலனை நடக்கும். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆம் தேதி ஆகும். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் 18 வயது நிரம்பியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே கடைசி நாள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே(மார்ச் 17) கடைசி நாள். 18 வயது நிறைவடைந்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் தற்போதுகூட விண்ணப்பிக்கலாம்.

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தடையில்லை, அங்கு சென்று வாக்கு சேகரிக்க கூடாது. தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை என்றார்.

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததுள்ளதால், பொன்முடி அமைச்சராக பதவியேற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழகத்தில் புதிதாக அமைச்சர் பதவியேற்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என அவர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com