ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

ஜாபர் சாத்திக்கை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு..
 நீதிமன்றக் காவலில் ஜாபர் சாதிக்
நீதிமன்றக் காவலில் ஜாபர் சாதிக்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிா்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்.

இதையடுத்து, இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தில்லியில் கைதான ஜாபர் சாதிக் விமானத்தில் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் முன்னிறுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாத்திக்கை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com