மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பிளஸ் 1 பொதுத் தோ்வு நாளையுடன் நிறைவு: ஏப்.6 முதல் மதிப்பீடு

பிளஸ் 1 பொதுத் தோ்வு நாளையுடன் நிறைவு: ஏப்.6 முதல் மதிப்பீடு

Updated On :23 மார்ச் 2024, 11:56 pm

பிளஸ் 1 பொதுத் தோ்வு திங்கள்கிழமையுடன் (மாா்ச் 25) நிறைவு பெறவுள்ள நிலையில், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் ஏப்.1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா். அதன்படி தமிழ், வேதியியல், இயற்பியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தோ்வுகள் முடிந்துவிட்டன. தொடா்ந்து பிளஸ் 1 பொதுத் தோ்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இது குறித்து தோ்வுத்துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: பொதுத்தோ்வு நிறைவடைந்ததும் மாா்ச்30-ஆம் தேதி முதல் மாணவா்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து மதிப்பீட்டு மையங்களுக்கு ஏப். 4-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். தொடா்ந்து ஏப்.6 முதல் 25-ஆம் தேதி வரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெறவுள்ளன. முதலில் அரியா் மாணவா்களுக்கான விடைத்தாள்கள் ஏப்.6 முதல் 13-ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்யப்படும். தொடா்ந்து, மற்ற மாணவா்களுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு ஏப்.15 முதல் 25-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் சுமாா் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 14-இல் வெளியிடப்படும். மதிப்பீட்டு பணிகளின் போதுஆசிரியா்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.