
கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பாஜகத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, “பணம் செலவிட மாட்டேன் என நான் பேசியதை இபிஎஸ் முழுமையாக கேட்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது. டீ கூட அடுத்தவர் பணத்தில் குடிப்பவர் இபிஎஸ்.
10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் வளர்ச்சியா?
குளமையான இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் உயர திராவிடக் கட்சிகளே காரணம்.
ஏப்ரல் 10-க்கு பிறகு திமுக - அதிமுக பங்காளி கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தலின் போது என்னை தோற்கடிக்க இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள்.” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




